பிசினஸ் பிளான் என்பது தொழில் லாபத்துடன் நடத்த வகை செய்யும் திட்டம்.
பிசினஸ் பிளான் என்பது தொழில் லாபத்துடன் நடத்த வகை செய்யும் திட்டம்.
பிசினஸ் மாடல் இரண்டு பகுதிகளைக் கொண்டது.
முதல் பகுதி விற்பனை பொருளின் தயாரிப்பு, வடிவமைப்பு, தேவையான மூலப் பொருட்கள் வாங்குவது, தயாரிப்பு செலவு போன்றவைகளை குறிக்கும்.
இரண்டாம் பகுதி அப்பொருளின் விற்பனை, வாடிக்கையாளர்களுக்கு பொருளையும் பொருள் பற்றிய செய்தியையும் சேர்க்கும் விதம், விநியோகம், டெலிவரி போன்றவைகளை குறிக்கும்.
தொழில் தொடங்குபவர்களில் பலர் ஒன்று பிசினஸ் பிளான் போடாமல் தொழில் துவங்குகிறார்கள் அது பாதி கிணறு தாண்டுவதற்குள் கால் தடுக்கி குப்புற விழுந்து திணறுகிறார்கள்.
பிசினஸ் பிளானில் தெளிவு பெற ஏதாவது வரைமுறை இருக்கிறதா? என் தொழிலுக்கும் அதை அப்படியே காப்பியடித்துக்கொள்ள முடியுமா ?
பிசினஸ் பிளான் ஒவ்வொரு தொழிலுக்கு ஏற்ப மாறுபடும். மாறுபட வேண்டும் எத்தனை தொழில்கள் உண்டோ அத்தனை பிசினஸ் பிளான்கள் உண்டு.
போட்டியாளர் பிசினஸ் பிளான் போலவே உங்களுடையது இருந்தால் நீங்கள் எப்படி அவரை வெல்வீர்கள்?
ஒவ்வொரு பிசினஸ் பிளானும் தனித்துவமாக இருப்பதோடு அவை மார்க்கெட்டில் உள்ள தடைகளை மீறுவதாக இருக்க வேண்டும்.
`ஜில்லெட்’ பிசினஸ் பிளானை எடுத்துக்கொள்ளுங்கள். `மேக் 3’ ரேஸரை அக்கம்பெனி தன் தயாரிப்பு செலவை விட குறைவான விலையில் விற்கிறது.
எதற்கு ஒன்றும் இல்லை. அந்த ரேஸரில் பொருத்தும் நவீன பிளேடுகளை அதிக விலைக்கு விற்கிறது. சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கிறது.
ஒரு தொழிலின் பிசினஸ் மாடலை எடைபோட சிறந்த வழி அக்கம்பெனியின் மொத்த லாபத்தை (Gross profit)கணக்கிடுவது.
கம்பெனி வருவாயிலிருந்து அதன் தயாரிப்பு செலவைக் கழிக்கும் போது கிடைப்பது தான் மொத்த லாபம்.
ஒரு கம்பெனியின் மொத்த லாபத்தை அதன் போட்டியாளர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது அதன் பிசினஸ் மாடலின் திறன் தெளிவாய் தெரியும்.
ஒரு கம்பெனியின் மொத்த லாபம் அதிகமாய் இருக்கும்பட்சத்தில் அதன் பிசினஸ் பிளான் சரியாய் அமைந்திருக்கிறது என்று கொள்ளலாம்.
ஒரு கம்பெனியின் பிசினஸ் மாடல் சிறப்பானதாய் இருந்தால் அதுவே அந்த தொழிலை வழிநடத்திச்சென்றுவிடும்
மொத்த லாப கணக்கை மட்டுமே பார்ப்பது தவறான முடிவெடுக்க வைக்கலாம்.
ஆய்வாளர்கள் கேஷ் ஃப்ளோ அதாவது நிகர வருமான கணக்கையும் சேர்த்துப் பார்ப்பார்கள். மொத்த லாபத்திலிருந்து நிர்வாக செலவுகளை (operating expenses) கழித்துப் பார்ப்பது. இப்படி கணக்கிடும் போது கம்பெனி உண்மையாகவே லாபம் ஈட்டுகிறதா என்பது சரியாய் தெரிந்துவிடும்.
வெற்றி பெறும் தொழில்களைப் பார்த்து பலர் அந்த பிசினஸ் மாடலைப் போலவே தங்கள் பிசினஸை வடிவமைத்து எந்த வித்தியாசமும் காட்டாமல் எந்த மார்க்கெட்டில் இறங்குவது, எந்த வாடிக்கையாளர் குறி வைப்பது, எந்த பொருட்களை விற்பது, என்ன வேல்யூ தருவது என்று புரியாமல் குழம்பி தவிக்கின்றனர்.
இன்னும் பத்து பேர் அதே பிசினஸில் அதே பிசினஸ் மாடலோடு களம் இறங்கி கரையேர முடியாமல் கதவை சாத்தி கடனில் மூழ்குகின்றனர்.
உதாரணம்?
அமெரிக்காவில் பல கம்ப்யூட்டர் கம்பெனிகள் கடைகள் மூலம் விற்று வந்தன.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த ‘மைக்கேல் டெல்’ என்பவர். டெல் என்ற கம்பெனி தொடங்கி அதை மாற்ற முடிவு செய்தார்.
மக்களுக்கு என்ன வகையில் கம்ப்யூட்டர் வேண்டுமோ அதை தன்னிடம் நேராக கூறச் செய்து கம்ப்யூட்டர்களைத் தயாரித்து கடைகள் மூலம் விற்காமல் நேரடியாகம்பெனியிலிருந்தே டெலிவரி செய்யும் வகையில் பிசினஸ் பிளானை வடிவமைத்தார்.
டெல்’ என்ற அந்த பிராண்ட் படிப்படியாக வளர்ந்து பரலோகம் வரை பரந்து விரிந்து இன்று பரவச நிலையை அடைந்திருக்கிறது!
எந்த தொழிலும் லாபமுடன் இயங்கும் வழியைக் காட்டும் முறைதான் பிசினஸ் மாடல். அதை புதுமையாய் செய்கிறீர்களோ அத்தனை வித்தியாசம். எத்தனை வித்தியாசமாய் இருக்கிறதோ அத்தனை லாபம்.

கருத்துகள்
கருத்துரையிடுக