சர்க்கரை ஏறி இறங்கும் அதிக அளவால், இதய பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, ஸ்ரோக், கால் பிரச்னை ஆகியவை ஏற்படுவது தடுக்கப்படும்.

   

சர்க்கரை ஏறி இறங்கும் அதிக  அளவால், இதய பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, ஸ்ரோக், கால் பிரச்னை ஆகியவை ஏற்படுவது உண்டு.

சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் அவர்கள் சாப்பிடும் தினசரி உணவு முறை மற்றும் சாப்பிடும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் . 

காலையில் எழுந்தவுடன் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் டீ அல்லது பால் 150 மி.லி, அடுத்து 8 அல்லது 8.30 மணிக்கு 2 இட்லி, முளைக்கட்டிய பயிறு, ஒரு முட்டை, காய்கள் எடுத்துக்கொள்ளுங்கள். 

கட்டாயம் காலையில் சாப்பிடும் நேரம் மாறக்கூடாது, காலையில் 8.30 மணிக்கு எல்லாம் காலை உணவை சாப்பிட வேண்டும். அது ஒரு ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் 11 மணிக்கு சோர்வாக உணர்ந்தால், உங்களால் எதையுமே செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் நீர் மோர் எடுத்துக்கொள்ளுங்கள், 

மோரில் சியா சீட் ஊறவைத்துவிட்டு, அதை கலந்துவிட்டு எடுத்துச் சென்று குடிக்கலாம்.

 அப்படி குடிக்கும்போது, வயிறு நிரம்பிய உணர்வும் இருக்கும்.

மதிய உணவாக, வேக வைக்காத காய்கறி சாலட் எடுத்துச் சென்று சாப்பிடலாம். அதனுடன் ஒரு முட்டை, காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம், நீங்கள் சைவமாக இருந்தால் ஊறவைத்த 10 பாதம் எடுத்துக்கொள்ளுங்கள். 

வேலைக்கு செல்பவர்கள் மாலை ஸ்நாக்ஸ்க்கு செய்து எடுத்துக்கொண்டு போக முடியாது என்கிறபோது, பழங்களை துண்டுகளாக நறுக்காமல் எடுத்துச் செல்லுங்கள். ஒரு சிறிய ஆப்பிள், கொய்யா பழம், சிறிய அளவிலான வெள்ளரிக்காய் அப்படியே எடுத்துச் சென்று கழுவி சாப்பிடலாம். அதோடு சேர்த்து ஒரு டீ குடித்துக்கொள்ளலாம். 

வேலைக்கு செல்பவர்கள் சிலர் எதுவுமே சாப்பிடாமல் ரொம்ப பசியுடன் வீட்டுக்கு வருவார்கள். வந்த உடனே வீட்டில் உள்ள ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட வேண்டியிருக்கும். ஏனென்றால், அவர்களால் சமைக்கிற வரை தாங்க முடியாது. இப்படி சாப்பிடுவதால், அவர்களுக்கு சர்க்கரை அளவு திடீரென உயரும். 

வீட்டில் இருக்கிறீர்கள் என்றால் ஏதாவது

ஒரு சுண்டல் வகை ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம்.

 இரவு 7.30 மணிக்கு இரவு உணவு சாப்பிட வேண்டும். அது சப்பாத்தி, பருப்பு என்று ஏதாவது அளவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இரவு உணவுக்கு பிறகு, சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக எதையும் சாப்பிடக் கூடாது 
ஒரு வேளை உங்களுக்கு பசிக்கிற மாதிரி இருந்தால் தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முனால், பால், புரோட்டின் பவுடர் எடுத்துக்கொள்ளலாம். 

நேரத்தை பிரித்து அளவாக, ஆரோக்கியமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென ஏற்ற இறக்கம் இருக்காது. HBA1C அளவும் சீராக இருக்கும் 

காலை உணவு: காலை 8:30 - 9:00 மணி

மதியம் சிற்றுண்டி: காலை 10:30 - 11:00 மணி

மதிய உணவு: பிற்பகல் 1:30 - 2:00 மணி

மாலை சிற்றுண்டி: பிற்பகல் 3:30 - 4:00 மணி

இரவு உணவு: மாலை 7:30 - 8:00 மணி

சாப்பிடும் நேரத்தை பிரித்துக்கொண்டு ஆரோக்கியமான உணவை அளவாக சாப்பிட்டால் சுகர் ஏறவே ஏறாது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்