சொத்து பற்றி அறிவிப்பு ,கவனம் குறைவு பற்றி தெரிந்து கொள்வோம்.

 அறிவிப்பு பற்றி தெரிந்து கொள்வோம்.

 செய்தித்தாள்களில் கொடுக்கப்படும் தகவல்கள் ஒரு அறிவிப்பு ஆகும் .

ஆனால் அது சம்பந்தப்பட்டவருக்கு அவருடைய கவனத்திற்கு அந்த தகவல் கொண்டு வரப்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

 நேரடியான அறிவிப்பு ஒருவர் பெறவில்லை என்றாலும் சாதாரண  மனிதன் ஒருவன் செய்திருக்க வேண்டிய விசாரணை தேடுதல் ஆகியவற்ற வேண்டுமென்றே செய்யாமல் இருக்கும்போது சட்ட நோக்கில் அவர் கொள்கையை அறிவிப்பு பெற்றிருந்தால் என்று  எடுத்துக் கொள்ளப்படும்.

 வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டதாகவும் முழு அறிவிப்பு கொடுக்கும் ஒரு விசாரணையை தவிர்க்கும் ஆர்வம் உடையதாகவும் அதற்கு  பொருள் கொள்ளப்படும் . 

விசாரணை செய்யாமல் இருப்பது நல்லெண்ணம் இல்லாமையே காட்டுவதாக இருக்க வேண்டும்   என்று கொள்ளலாம். 

 ஒருவர் தமக்கு வரும் பதிவு அஞ்சல் ஒன்றினை மறுத்தால் அவருக்கு அதில் கூறப்பட்டிருப்பவை பற்றி கொள்நிலை அறிவிப்பு பெற்றிருந்தார் என்று எடுத்துக் கொள்ளப்படும்.

அறியவில்ை  என்று அவர் சொல்ல முடியாது ஏனென்றால் அவர் செய்திகளை தெரிந்து கொள்வதில் இருந்து அவராகவே வேண்டும் என்றே விலகி இருந்தார் . 

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட செய்தியை பற்றி விசாரிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு இருப்பதாக கருதுகின்றோம் 

எடுத்துக்காட்டாக ஒருவர் தன்னுடைய  பொருள் ஒன்றை விற்கிறார்.

பொருளை வாங்குபவர் சட்டப்படியான இன்றியமையாத தேவைக்கான சூழ்நிலைகளை விசாரித்து அறிய  வேண்டும். 

 அறிவுள்ள எவனும் செய்வது போல இப்பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் இதன்படி ஒரு பொருளை வாங்குபவர் அதன் உரிமை மூலங்களை பற்றி விசாரித்து அறிய தவறி விடுகிறார் என்றால் அவருக்கு அது பற்றிய அறிவிப்பு இருந்ததாகவே கருதப்படும்.

கவனம் குறைவு 

சாதாரண மனிதன் ஒருவன் செய்ய வேண்டிய செயலை செய்யாமையும் செய்யக்கூடாததை செய்தாலும் கவனக் குறை ஆகும் .

இது கவனமின்மை என்பது ஒருவரது நடத்தை அல்லது அதன் விளைவுகள் குறித்து அவருக்கு  அக்கறை இல்லாத மனநிலையாகும்.

 அவர்கள் நடத்தை  போக்கிலிருந்து   ஊகிக்கப்படும் தெளிவாக வரையறுத்துக் கூறுவது கடினம் .

ஒவ்வொரு சூழ்நிலைகளையும் தகவல்களையும் பொறுத்தது மேலும் கவனம் இன்மை மட்டும்      சூழ்நிலை அறிக்கையாக கொள்ளப்படுவதில்லை .

 கவன  கேடாக இருத்தல் வேண்டும்.

 சில சூழ்நிலைகளில் ஒருவரில் நடத்தியானது விசாரணை தேடல் ஆகியவற்றை வேண்டுமென்றே செய்யாதிருத்தால் ,  என்றமுறையின் கீழ் வந்தாலும் கவனக்குறை என்று  எடுத்துக் கொள்ளப்படும். 

நகர பகுதியில் சொத்துணை வாங்குபவருக்கு விற்பனை செய்பவர் வரி பாக்கி இருக்க வாய்ப்புகள் உண்டு

 சொத்தின் பேரில் பொறுப்பினை பொறுப்பு உண்டு இவற்றை விசாரிபது  வாங்குபவரின் கடமை இதை செய்ய தவறினால் இது பற்றி குழுநிலை அறிவிப்பு இருப்பதாக எடுத்து  கொள்ளப்படும். 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்