சொத்துரிமை மாற்றம் செய்யும்போது அதை பெறுபவருக்கு சொத்தின் அனைத்து உரிமைகளும் சென்றடையும்

சொத்துரிமை மாற்றம் செய்யும்போது அதை பெறுபவருக்கு சொத்தின் அனைத்து உரிமைகளும் சென்றடையும் 

நிலம் இயந்திரம் வீடு கடன் தொடர்பான பாத்தியம் பணம் ஆகியவை பல்வேறு வகையான சொத்துகள் ஆகும்.

இவை மாற்றப்படும் பொழுது அத்துடன் சேர்ந்து அதனுடைய உரிமைகள் எல்லாம் மாற்றம் பெறுகின்றன .

மாற்றப்படும் சொத்து நிலமாய் இருப்பின் அத்துடன் இணைந்திருக்கும் வசதி உரிமைகள் உரிமை மற்றும் ஏற்பட்ட பிறகு  வருகின்ற வாடகை வருமானங்கள் மற்றும் நிலத்துடன் பொருத்தப்பட்ட பொருட்கள் உரிமை மாற்றம் செய்பவரிடமிருந்து  இருந்து .உரிமை பெறுபவருக்கு போய் சேரும்.

 நிலத்தின் அடியில் உள்ள சுரங்கங்கள் கணிப்பொருள்கள் போன்றவை ஒப்பந்த பேச்சின் அடிப்படையில் உரிமை மாற்றம் பெறும் இது பற்றி எத்தகைய உரிமைகளையும் உரிமை மாற்றம் செய்பவர் தம்முடன் நிறுத்தி  கொள்ளா விடில் உரிமை மாற்றம் பெறுபவரே  அவற்றை பெறுவார்.

 ஆனால் அடமானம் குத்தகை போன்றுவற்றில் இது பற்றிய பேச்சு வார்த்தைகள் இல்லாவிடில்  குத்தகை  பெறுபரே  அடமானம் பெறுபவரே இவற்றைப் பெற முடியாது .

மாற்றப்படும் சொத்து இயந்திரமாய் இருப்பின் அதனுடன் இணைந்துள்ள அசைவில் பொருள்களும் மாற்றம் பெறும் .

வீடு   ஓண்டு மாற்றப்பட்டால் அத்துடன் இணைந்து இருக்கும் வசதி உரிமைகள் உரிமை மாற்றம் ஏற்பட்ட பிறகு   சேரகின்ற வாடகை மற்றும் பூட்டுகள் கம்பிகள் கதவுகள் சளரங்கள் மற்றும் நிரந்தர பயனுக்காக அமைக்கப்பட்ட பொருள்கள் ஆகியவை உரிமை மாற்றம் பெறுபவரை வந்து அடையும் .

 ஒரு கடன் அல்லது  தொடர்பான  பத்தியத்தை உரிமை மாற்றம் செய்யும்போது அதன் பினையமும் மாற்றம் வரும் ஆனால் உரிமை மாற்றத்திற்கு முன்பு சேர்ந்த வட்டி பாக்கி அவரை சேராது .

மேற்கண்டையைப் போலவே மாற்றப்படும் சொத்து பணமாகவோ வருமானத்தை தரும் சொத்தாகவோ இருந்தால் அத்தகைய உரிமை மாற்றத்திற்கு பின் வருகின்ற வட்டியோ வருமானமோ உரிமை மாற்றம் பெற்றவருக்கு போய் சேரும் .

நலன்கள் மட்டுமின்றி வேறு சில உரிமையும் கூட உரிமை மாற்றம் பெறுபவருக்கு உரிமை மாற்றத்தின் போது போய் சேர்கின்றன.

 சுவாதீன உரிமையும் வாங்கும் உரிமையும் விற்கும் உரிமையும் உரிமை மாற்றம் பெறுபவற்கு சென்றடையும்.

 இதே போலவே   தொழில்  பெயர்  வணிக  குறி மற்றும்  வணிக  பெயர் முதலியவற்றை உரிமை மாற்றம் பெறுபவர் பெறுவார். 

 தொழிலாக இருந்தால் அந்த தொழிலினுடைய பெயர்  அந்த தொழிலுடைய குறி முதலியவற்றையும் உரிமை மற்றும் பெறுபவர் பெறுவார்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்