நல்ல மனம் வாழ்க திருவள்ளுவரின் அறிவுரை.

நல்ல மனம் கொண்டவர்கள் நலமுடன் வாழ்வார்கள் .

நற்செயலில் ஈடுபட்டால் இறந்த பின்னும் புகழுடன் வாழலாம்.

 குழந்தை பெற்றோர் உறவினர்களுக்கு உதவுவது திருமணம் செய்தவரின் கடமை .

நல்ல குணம் கொண்ட மனைவி அமைந்தவனுக்கு குறை எதுவும் இருக்காது.

 நற்பண்புள்ள குழந்தையை பெற்றவனுக்கு எந்த பிறவியிலும் துன்பம் நெருங்காது .

புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்த்து கணவரின் வருமானத்திற்கு ஏற்ப வாழ்பவளே நல்ல பெண்.

 பிறர் மீது அன்பு காட்டு .

சிறப்பான வாழ்க்கை அமையும் .

நன்மை எது தீமை எது என்பதே அறிந்து நன்மை செய்பவர் பெருமைக்குரியவர் .

உயிர்கள் மீது இரக்கம் காட்டுபவரே உயர்ந்தவர்.

 தர்மத்தின் வழியில் வாழ்வு நடத்து .

பொருளை இழந்தால் மீண்டும் பெறலாம் அருளை இருந்தால் பெறவே முடியாது .

பணம் நிலை இல்லாதது அதை கொண்டு நிலையான தர்மத்தை செய்.

 யாரு எது சொன்னாலும் அதில் உள்ள உண்மையை அறிந்து கொள் .

வறுமையில் இருந்தாலும் தாயின் பசியை போக்க தீய வழியில் செல்லாதே .

நாட்டில் நிகழும் நன்மை தீமையை ஆராய்ந்து ஆட்சி செய்யாதவர் நாட்டை  இழக்க நேரிடும்.

 நல்ல மனம் வாழ்க திருவள்ளுவரின் அறிவுரை.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்