நிலம் வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
பிற்காலத்தில் எந்தவிதமான சட்டசிக்கல்களும் வந்துவிடக்கூடாது .
சொந்தமாக நிலம் வாங்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் நிலத்தை யாரிடமிருந்து வாங்குகிறீர்களோ, அவர்கள் நம்பகமான நபராக இருப்பது அவசியம்.
. ஒருவேளை நீங்கள் சொத்தில் முதலீடு செய்தால், தெரிந்த நபரின் உதவியுடன் நிலத்தை வாங்குவது முக்கியம்.
சட்ட ஆவணங்கள்: அதேபோல, நிலத்தை வாங்கும் முன்பு. நிலம் தொடர்பான சட்ட ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில், சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான சட்ட ஆவணங்களை கேட்டு பெறலாம். மேலும், வழக்கறிஞர் உதவியுடன் விற்பனை ஒப்பந்தம், சொத்து வரி ரசீது போன்ற ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
நிலம் வாங்குவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நில உரிமையாளரை நேரில் சந்தித்து, நிலம் குறித்து விரிவான பேச்சை நடத்தலாம்.
சந்திப்பின்போது, நிலம் தொடர்பான ஆவணங்களை நன்றாக ஆராய முடியும்.. அத்துடன், அவர்களின் அடையாள அட்டை, அடையாள அட்டை, ஆதார் அட்டை, நிலப்பதிவு போன்றவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.
அக்ரிமென்ட் போடுவதற்கு முன்பு, அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் கருத்து கேட்கலாம்.
மூலப்பத்திரம்: அதேபோல, ஒருவர் நிலத்தை வாங்கும் முன்பு கடந்த 30 வருடங்களாக அந்த நிலத்தை யார் எல்லாம் வைத்து இருந்தார்கள் என்பதை அறிய வேண்டும்.. இந்த விவரங்கள் நிலத்தின் மூலப்பத்திரத்தில் இருக்கும் .
வில்லங்க சான்றிதழ் பெற்று பெற்று அந்த இடத்தில் வேறு ஏதாவது சிக்கல்கள் உள்ளதா?
நிலத்தின் மீது வழக்கு அல்லது கடன் ஏதாவது உள்ளதா?
சொத்தை விற்பவரின் பெயரில் அந்த நிலத்தின் தற்போதைய உரிமைக்கான பட்டா உள்ளதா?
பத்திரத்தில் குறிப்பிடப்பட்டது போல நிலத்தின் அளவு பட்டா, சிட்டாவில் உள்ளதா?
நில வரி: நீங்கள் வாங்கப்போகும் இடத்தின் வரைப்படத்தையும் சரிபார்க்க வேண்டும்.
வீடு கட்ட வாங்கும் இடத்தின் மீது மின் கம்பிகள் சென்றால், அங்கு வீடு கட்ட முடியாது. அதனால், இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிலத்தின் உரிமையாளரின் பெயரில், நில வரி செலுத்தப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும்.
நில உரிமையாளர் பவர் பத்திரம் மூலம் முகவருக்கு சில அதிகாரம் வழங்கியிருந்தால், அந்த அதிகாரம் நிலுவையில் உள்ளதா?
முதன்மையாளர் (நில உரிமையாளர்) உயிருடன்தான் உள்ளாரா என்று சரிபார்க்க வேண்டும்.
ஆவணங்கள்: நிலம் வாங்கும்போது, உரிமைப் பத்திரம், பட்டா, என்கம்பரன்ஸ் சான்றிதழ், லேஅவுட் ஒப்புதல் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்..



கருத்துகள்
கருத்துரையிடுக