உரிமை மாற்றத்தில் சொத்தின் மீது கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் தெரிந்து கொள்ளுங்கள்.

 உரிமை மாற்றத்தில் சொத்தின்  மீது கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் தெரிந்து  கொள்ளுங்கள் 

பொதுவாக  சொத்தை ஒருவர் மாற்றும்போது அல்லது விற்கும்போது அவர் கொண்டிருக்கும் எல்லா உரிமைகளும் உரிமை மாற்றம் வாங்குபவர்ற்கு போய் சேரும் 

ஆனால் மாற்றப்படக்கூடிய சொத்தினை குறித்து இருதரப்பினர்கள் தங்களுக்குள் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ளலாம்

ஒருவருக்குள்ள சொத்து  மற்றும் உரிமையானது அச் சொத்தில் இருந்து எழுகின்ற நலன்களில் இருந்து பிரிக்க முடியாதவை அத்துடன் இணைந்தவை எனவே ஒருவர்சொத்தினை மாற்றும் பொழுது அல்லது விற்கும் பொழுது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டால் கட்டுப்பாடுகள் செல்லாதது ஆகும். 

ஒருவர் ஒரு சொத்தினை சில நிபந்தனைகளுடன் உரிமை மாற்றம் செய்யலாம் ஆனால் அத்தனை நிபந்தனைகள் அவர் சொத்தினை மாற்றி அளிப்பதற்கு அல்லது விற்பதற்கு முழுமையாக தடுப்பதாக இருக்கக் கூடாது

 ஒருவர் அவருடைய வாரிசுக்கும் தன்னுடைய சொத்தை கொடுக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம   அந்த சொத்தினை வேறு யாருக்காவது மாற்றி அளித்தால் அல்லது விற்பனை செய்தால்  அதை கட்டுப்படுத்த பட்டால் அந்த சொத்து கட்டுப்பாடு செல்லாது. 

 இதைத்தான் சொத்துக்கள் தங்கு தடை இன்றி மாற்றப்படுதல் வேண்டும் என்ற பொதுக் கொள்கையின் அடிப்படையில் விளைந்ததாகும்.

 இந்த விதி சட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இரண்டு கூறுகளை உள்ளடக்கியது.

 1 ) இச்சட்டம் பொருந்தும் வழியில் சொத்துரிமை  மாற்றம்  கொண்டிருக்க வேண்டும்

  அதன் முழு உரிமை பெறுவதோ  சொத்தில் அவருக்குள்ள நலன்களை மாற்றுவதிலிருந்து அவர்களை முழுமையாக தடுப்பதாக கட்டுப்பாடான  அல்லது நிபந்தனையோ விதிக்கப்பட்டால் அது செல்லாது முழுமையாக கட்டுப்படுத்தும் நிபந்தனைகள் மட்டுமே செல்லாது

 பகுதி கட்டுப்பாடுகள் செல்லக்கூடியவையே

 சொத்து ஒன்றை விற்பனைக்கு அல்லது உயில் வழியாக கொடுக்கப்பட்டால் அத்துடன் சொத்து குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும்  விற்பனை  செய்ய கூடாது என்ற கட்டுப்பாடு வைக்கப்பட்டிருந்தால் இத்தகைய கட்டுப்பாடு பகுதி கட்டுப்போடாகும் எனவே இது செல்லும் 

 இதில் கூறப்பட்டுள்ள தடை விற்பனை  பற்றி  மட்டுமே  தவிர வேறு முறைகளில் மாற்ற வகைகள் உண்டு. 

ஒருவர் அதனை குத்தகைக்கு விடலாம் அல்லது அடமானம் வைக்கலாம அல்லது வேறு ஒருவர் வாழ்நாள் வரை அவருக்கு எழுதி வைக்கலாம் இந்த வகையில் மாற்றி அளிக்கலாம் குறிப்பிட்ட வகையில் பொருத்தம் கட்டுப்பாடுகள் குறைவானதே அவர் குடும்பத்தினை தவிர குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாருக்கும் விற்கக் கூடாது என்று தான் பகுதி கட்டுப்பாடு சொல்லப்பட்டுள்ளது மேலும் குடும்பத்தில் நிறைய உறுப்பினர்கள் இருப்பார்கள் .  பகுதி கட்டுபாடு செல்லும். 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்