உயிரோடு இல்லாதவர் பெயரில் சொத்தினை மாற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்
உயிரோடு இல்லாதவர் பெயரில் சொத்தினை மாற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் .
சொத்துரிமை மாற்று பிரிவுகள்
ஓர் உரிமை மாற்றம் செய்யும் தேதியில் உயிரோடு இல்லாத அதாவது தாயின் கருவில் கூட இல்லாத குழந்தைகளுக்காக ஏற்படுத்தும் உரிமை மாற்றத்திற்கான விதிமுறைகள் பின் வருமாறு .
பிறக்கவிருக்கும் குழந்தைகளின் பேரில் வாழ்பவர் இடையேயான உரிமை மாற்றத்தினை நேரடியாக ஏற்படுத்த முடியாது.
பிறக்கவிருக்கும் குழந்தைகளின் பெயரில் அளிக்கப்படும் கொடைக்கு முன்னதாக வேறொரு பெயரில் ஒரு உரிமை மாற்றம் இருக்க வேண்டும் அதாவது அவர் சொத்து பெறுவதற்கு முன்னதாக இடைக்காலத்திற்கு வேறு ஒருவர் சொத்தினை பெற்றிருக்க வேண்டும் .
பிறக்காத குழந்தைகளின் பெயரிலான நலன்களுக்கு முன்னதாக இரண்டு மூன்று ஆயுள் பாத்திய சொத்துக்கள் கூட இருக்கலாம்.
பிறக்கவிருக்கும் குழந்தைகளின் பெயரில் கொடுக்கப்படும் நலன்கள் ஆவது உரிமை மற்றும் செய்பவர் அப்போது பெற்றிருக்கும் எல்லா முழு உரிமைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் .
மேலும் அது பெறுவதற்கு முந்தைய நலன் ஒன்றுக்கு அடுத்ததாக இருக்க வேண்டும் உதாரணத்திற்கு ஏ என்பவர் ஆயுள் பாத்தியமும் இறுதியாக பி என்பவருக்கு முழுமையாகவும் கொடுக்கப்பட்டால் அது செல்லாததாகும்.
ஏனென்றால் A இன் பிறக்கவிருக்கும் மகனுக்கு கொடுக்க இருப்பது உரிமை மாற்றம் செய்தவர் பெற்றிருந்த முழு சொத்தன்று ஆயுள் பத்திய உரிமை மட்டுமே ஆகும்.
பிறக்க இருக்கும் குழந்தைகளின் பேரில் உரிமைக்காக கொடுக்கப்படும் உரிமை மற்றும் ஆனது உரிமை வயதை தாண்டி தள்ளிப் போடுவதாக இருத்தல் கூடாது .
பிறக்கவிருக்கும் குழந்தை சொத்தை பெற்றுள்ள முந்திய நபரின் நலன் முடிவதற்கு முன்னதாக பிறத்தல் வேண்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக