புறம்போக்கு கட்டடங்களை ,இடங்களை காலி செய்ய அரசு விதிகள் .
புறம்போக்கு கட்டடங்களை இடங்களை காலி செய்ய அரசு விதிகள் .
முதலில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பார்கள் அந்த நோட்டீஸில் அவர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தின் அளவினை குறிப்பிட்டு இருப்பார்கள்.
இந்த நிலத்துக்கு வரி ஏதாவது விதிக்கப்பட்டிருக்கிறதா? என ஆராய்ந்து வரி விதிக்கப்பட்டிருந்தால் முழு வரியையும் வசூல் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் வரி விதிக்கப்படாத நிலமாக இருப்பின் அதற்குரிய தண்டத் தீர்வையும்் அதாவது அபராத்துடன் வரியையும் சேர்த்து ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவுறுத்துவார்கள்
ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள பயிர் சாகுபடி உபகரணங்கள் கட்டுமானங்கள் ஆகியவற்றை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது எனக் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார்கள் .
அரசாங்க நிலத்தில் கட்டடம் பயிர் சாகுபடி என எது செய்திருந்தாலும் சட்டப்பிரிவு 6 (1 ) இன் கீழ் பறிமுதல் செய்ய கால அளவு நிர்ணயம் செய்வார்கள் .
நோட்டீஸ் குறிப்பிட்ட தேதியில் உங்கள் நிலத்தில் உள்ள அத்தனை பொருட்களையும் பறிமுதல் செய்து அரசே கையகப்படுத்தும் என்ற அறிவிப்பு நோட்டீஸ் மூலம் தருவார்கள்.
அதற்குள் நீங்கள் காலி செய்து கொள்ளலாம் கண்டிப்பாக இன்ன தேதிக்குள் என்று தான் அறிவிப்பார்கள் .
ஒரு வாரத்திற்குள் , 15 நாளைக்குள் என்று கால நிர்ணயம் செய்ய மாட்டார்கள் .
பொது பணித்துறை நெடுஞ்சாலைத்துறை உட்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் அந்த துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க அதிகாரம் உடையவர்கள தேவை ஏற்பட்டால் வருவாய்த்துறை சேர்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பை நாடலாம் .
பஞ்சாயத்து உட்பட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் வருவாய் துறை நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்கள் .
நகராட்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நகராட்சி ஆணையர் பேரூராட்சி ஆணையர் மூலம் நடவடிக்கை எடுப்பார்கள் .

கருத்துகள்
கருத்துரையிடுக