சான்று கையொப்பமிடுதல் என்றால் என்ன?

 சான்று கையொப்பமிடுதல் என்றால் என்ன?

  நீதிமன்றத்தில் சாட்சி சொல்லுவதை பற்றி கேள்விப்பட்டு இருப்பிர்கள் அது ஒரு நிகழ்ச்சி சாட்சியாக இருப்பதாகும். 

 சான்று கையொப்பமிடலும் இதன் அடிப்படையில் அமைந்தது  அதாவது ஒரு ஆவணத்தில் சான்று கையெழுத்து என்பது ஒரு ஆவணத்தை எழுதிக் கொடுத்தவரின் கையொப்பத்தினை உறுதிப்படுத்துவதற்காக தன்னுடைய சொந்த கையொப்பமிட்டு சாட்சியாக இருத்தல் ஆகும்.

 சான்று கையொப்பமிடல் நோக்கம்

 சான்று கையொப்பமிடுவது நோக்கம் என்னவெனில் ஆவணத்தை எழுதி கொடுக்கும் பொழுது எந்தவிதமான வலுக்கட்டாயம், மோசடி? தகாநிலை, செல்வாக்கு, பிரித்து கூறல் போன்ற சூழ்நிலைகள் இல்லை என்பது உறுதிப்படுத்துவதற்காக ஆகும் .

முறையான சான்று கையொப்பம் சொத்துரிமை மாற்று சட்டத்தில் சான்று கையப்பத்தின் விளக்கம் கூறப்பட்டுள்ளது .

 ஒரு முறையான சான்று கையொப்பத்திற்கு பின்வரும் விளக்கம் இன்றி அமையாததாகும் .

ஆவணம் ஒன்றில் கட்டாயம் சான்று     கையப்பமிடப்பட்டிருக்க வேண்டும் ,அவசியம் இருவர் சாட்சியாக கையொப்பம் செய்து இருக்க வேண்டும்.

 ஒவ்வொரு சாட்சியும்   ஆவணங்கள்  எழுதிக் கொடுப்பவர் அதில் கையொப்பம் விடுவது  அவர் கைரேகை பதிவு பார்த்து இருத்தல் வேண்டும் .

மற்றொருவர் அவருக்காக அவர் முன்னிலையில் அவர் கட்டளையின்படி ஆவணத்தில் கையொப்பம் செய்வது பார்த்திருக்க வேண்டும் .

ஆவணத்தை எழுதிக் கொடுத்தவரிடம் இருந்து அவர் கையொப்பம் கைரேகை  மற்றவரின்  கையொப்பம் பற்றிய தனிப்பட்ட ஒப்புதல் அவரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். 

 ஒவ்வொரு சாட்சியும் ஆவணம் எழுதிக் கொடுப்பவரின் முன்னிலையில் கையெழுத்து இடவேண்டும்

 கையெழுத்து கைரேகை பதிப்பதையும் உள்ளடக்கம் என்பதாக பொதுவாக விளக்க சட்டத்தில் கூறுகிறது எனவே எழுத படிக்க தெரியாதவர் கையெழுத்து இடுவதற்கு பதில்  ரேகை பதிக்கலாம் .

எல்லா சாட்சிகளும் ஒரே சமயத்தில் அவர் முன்னிலையில் இருந்து   கையெழுத்து    இட வேண்டும் 

ஒவ்வொருவரும் ஆவணம் எழுதிக் கொடுப்பவர்   கையெழுத்து    போடும்போது இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

 சாட்சிகள்  வெவ்வேறு  சமயம் ஆவண நிறைவேற்றலுக்கு பின்னர் கூட சான்று கையெழுத்து  அளிக்கலாம் .

  ஆனால்     சாட்சி கையெழுத்து  போடுபாவர்  ஆவணத்தில் அதனை எழுதிக் கொடுத்தவர் கையெழுத்து போட்டதையோ கைரேகை பதித்ததையோ அவருக்கு முன்னிலையில் அவரது கட்டளைப்படி வேறொருவர் கையெழுத்து போட்டதையோ அவரிடமிருந்து  தனியாக கேட்டு ஒப்புதல் கேட்ட பிறகு அவரது முன்னிலையில் சான்று கையெழுத்து செய்யப்பட வேண்டும் .

ஒருவர் சான்று கையப்படுவதால் மட்டும் ஆவணத்தில் கண்டதே அனைத்தையும் அறிந்தவர் என்று கூற முடியாது .

வெறும் சான்று   கையெழுத்து  ஒரு முரண் தடையாக செயல்படாது . 

மேலும்   இசைவு தெரிவிப்பதும் ஆகாது

 ஒரு தனிப்பட்ட சான்று மூலம் உறுதி செய்யப்பட்ட வேண்டும். 

சாட்சி கையெழுத்து போடுபவருக்கு முழு தகவலும் தெரிந்தது என்று கூற முடியாது.

 அதற்கு அவர் இசைவு தெரிவித்து இருந்தார் இந்த முரண் தடையும் பயன்படுத்த முடியாது.

 சான்று செய்யப்படும்   ஆவண‌ம் சொல்லாததென ஆகும்போது ஆவணத்தை நீதிமன்றத்தில் செயல்படுத்த முடியாது

 உதாரணமாக  ஒரு அடமானமாக இருந்தால் அது ஒரு அடமானமாகவோ அல்லது பொறுப்பினை பொறுப்பாகவும் செயல்படுத்த இயலாது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்