சொத்து உரிமை மாற்றம் பற்றிய விவரம்

 சொத்து உரிமை மாற்றம் பற்றிய விவரம்.

 ஒருவர் உயிருடன் வாழும் போது நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் தன்னுடைய சொத்தை ஒருவருக்கோ அல்லது அதற்கு மேற்பட்ட நபருக்கோ சொத்து உரிமையை மாற்றுவது  ஆகும். அத்தகைய செயலை சொத்து உரிமை மாற்றம்   என்பதாகும் .

உயிருடன் வாழ்பவர் என்ற சொல்லுக்கு நிறுவனங்கள் சங்கங்கள் தனிமனிதன் தனி மனித கூட்டம் ஆகியவை உள்ளடக்கும் .

சொத்து மாற்றுவது என்பது ஒருவர் உயிருடன் இருப்பவர் ஒருவருக்கோ அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு சொத்து மாற்று நிகழ்வாக இருக்க வேண்டும் .

சொத்து மாற்றம் செய்யப்படுவதாக ஒரு செயல் இருக்க வேண்டும்.

 அந்த மாற்றமானது அப்போது நடைபெறுவதாகவே அல்லது எதிர்காலத்தில் நிகழுவாதாகவோ இருக்க வேண்டும்.

ஒவ்வொரு சொத்து மாற்றத்திலும் இரு நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வேண்டி இருக்கின்றனர். 

பொதுவாக ஒருவர் தமக்குத் தாமே  தன்னுடைய சொத்தை மாற்றி ஏற்படுத்திக் கொள்ள முடியாது .

 ஒரு சொத்தை மாற்றுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் உயிருடன வாழ்பவர் இடையே நடைபெறுவதாக இருத்தல் வேண்டும்.

 ஒருவர் தமக்குத்தானே சொத்தை மாற்றம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது .

ஒருவர் இல்லை அதற்கு மேல் உள்ளவர்களுடைய சேர்ந்து சொத்தை மாற்றிக் கொள்ளலாம் .

ஒரு சொத்துக்கு தன்னையே ஒரு டிரஸ்டியாக கொண்டு சொத்தை தனக்கே மாற்றி கொள்ளலாம். 

ஒருவர் தன்னுடைய சொத்தை கோவில்களுக்கு எழுதி வைக்கும் பொழுது சொத்தை உயில் எழுதி வைக்கலாம் .

அவர் இறந்த பிறகு இந்த உயில் நடைமுறைக்கு வரும் ஆனால் கோயில்  விற்பனை பத்திரம் சொத்தை விற்பனை பத்திரம் போட்டு எழுத முடியாது. 

ஒருவர் சொத்தை விற்பனை பத்திரம் போடும் பொழுது தன்னுடைய  சொத்து உரிமையை  வாங்குபவருக்கு உரிமைகள் மாற்றப்படுகின்றன.

 விற்பனையில் முழு உரிமைகளும் மாற்றப்படுகின்றன.

 குத்தகை சொத்தை பொறுத்தவரையில் அம் மாற்றம் பெற்றவர் அனுபவிக்க உரிமை பெறுகிறார் .

பாகப்பிரிவினை செய்யும் போது ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளில் தான் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது 

பொதுவாக அனுபவித்து வரும் உரிமைகள் தனித்தனியாக பிரித்து அனுபவிக்க படுகிறது.

 குடும்ப தகராறு தீர்க்கும்   செட்டில்மெண்ட் அல்லது ஒத்தி பத்திரமோ பாகப்பிரிவினைக்கு ஒரு மாற்றமாகாது ஏனெனில் அதில் உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் சம்பந்தப்பட்ட சொத்தில் மீது ஒரு வகை முன் பாத்தியம் அதில் உள்ளது .

  உரிமை  துறப்பு  என்பது முழுமையாகவோ பகுதியாகவோ விட்டு விடுதல் ஆகும். 

அதுவும் உரிமை மாற்றம் என கருதப்படுவதில்லை உரிமை மாற்றம் என்பது நிகழ்காலத்தில் மட்டும் இன்றி எதிர்காலத்திலும் செய்யப்படும் மாற்றம் ஆகும். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்