புதையல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

 புதையல் கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்.

 ஏதாவது மதிப்புடைய ஒரு பொருளும் பூமிக்குள் புதைந்து அது கண்டுபிடிக்கப்பட்டால் அது   புதையல்.

 இந்திய புதைபொருள் சட்டத்தின் படி எந்த ஒரு புதையலும் கண்டுபிடிக்கப்பட்டால் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் .

புதைபொருளை உடனே அருகில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் .

 கண்டெடுத்தவர் ஒப்படைக்காமல் இருந்தாலோ அல்லது தகவல் தராமல் மறைத்தாலோ ஒரு வருட  தண்டனை அல்லது  அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 

 புதையலை கண்டெடுத்த இடத்தில் உரிமையாளர் தகவல் தெரிவிக்கவிட்டாள்  சிறைத்தண்டனை அல்லது அபாதரம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். 

புதையல் கண்டுபிடிக்கப்பட்ட விவரங்குறித்து எழுத்து பூர்வமாகவட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க வேண்டும். 

அவர்கள் புதைபொருளை கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பார்கள் .

ஆட்சி தலைவர்   புதையல்  குறித்து அறிவிக்கையை  நாளிதழ்லில்  விளம்பரப்படுத்துவார்.

 அது புதையல் கிடையாது அது என்னுடைய சொந்த பொருள் என யாராவது சொந்தம் கொண்டாட நினைத்தால் குறிப்பிட்ட தேதி  மாவட்ட ஆட்சியரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம.

 அதே சமயத்தில் புதைபொருள் விவரங்களை அருங்காட்சியத்திற்கு அனுப்பி அருங்காட்சியில் வைக்க உகந்துதன என அறிவார்கள் .

புதயல்   யாருக்கும் சொந்தமில்லை என்னை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்து ஆணை பிறப்பிப்பார் மாவட்ட ஆட்சியரின் இந்த ஆணை திருப்பி அளிக்காதவர்கள் வருவாய் நிறுவனங்களுக்கு மேல்முறையீடு செய்து கொள்ளலாம் .

அரிய பொருளாக இருப்பின்  அருங்காட்சியத்திற்கு அனுப்பி விடுவார்கள்.

  அதை போல் மத சம்பந்தப்பட்ட சாமி சிலைகள்  இருந்தால் அரசு அருங்காட்சியத்தில் அனுமதிக்காக  வருவாய் துறை அதிகாரிகள் எடுத்து வருவார்கள்.

 அதில் சமூகம் எதுவும் சொந்தம் கொண்டாடினால் இது எங்கள் குலசாமி நாங்கள் வணங்கும் கடவுள் அது எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டால் மாவட்ட ஆட்சித் தலைவர் விருப்பத்திற்கு இணங்க முடிவு செய்து கொள்ளலாம்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்