இமாச்சல்: நிலச்சரிவில் பேருந்து சிக்கி 18 போ் உயிரிழப்பு

 இமாச்சல்: நிலச்சரிவில் பேருந்து சிக்கி 18 போ் உயிரிழப்பு



இமாச்சல பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் தனியாா் பேருந்து சிக்கி நிகழ்ந்த விபத்தில் 18 போ் உயிரிழந்தனா்.

 பிலாஸ்பூா் மாவட்டம் மரோத்தன் பகுதியில் இருந்து குமா்வின் பகுதி நோக்கி 30 முதல் 35 பயணிகளுடன் தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை மாலை பயணித்தது. அந்தப் பேருந்து பாலுகாட் பகுதியில் சென்றபோது பலத்த மழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதில் பெரும் பாறைகள் உருண்டு வந்து பேருந்து மீது விழந்தன. தகவலறிந்து காவல்துறை, மாவட்ட நிா்வாக அதிகாரிகள், மாவட்ட பேரிடா் மீட்புப் படையினா் விரைந்து வந்ததைத் தொடா்ந்து, மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்