12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கனமழை பெய்யும் வாய்ப்பு
வங்கக்கடலில் காற்று சுழற்சி- 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு அநேக இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்
கருத்துரையிடுக