கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தீபாவளிக்கு மது விற்பனை ரூ.29 கோடி குறைந்திருக்கிறது.

 தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசு மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. 

 தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 

இந்த கடைகளில் சாதாரண மது வகைகள் 60 சதவீதம், நடுத்தர வகை மது வகைகள் 25 சதவீதம், ப்ரீமியம் மது வகைகள் 15 சதவீதம் அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது அதன்படி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடி வருமானம் கிடைக்கிறது.

 இதுவே வார இறுதி நாட்களில் ரூ.200 கோடியும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கு விற்பனை நடந்து வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.45,000 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது. 

தமிழகத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கும். 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் அக்.30-ம் தேதி ரூ.202.59 கோடிக்கும், தீபாவளி நாளான 31-ம் தேதி 235.94 கோடிக்கும் என மொத்தம் ரூ.438.53 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன  

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில், ரூ.467 கோடிக்கு மது விற்பனையான நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு மது விற்பனை ரூ.29 கோடி குறைந்திருக்கிறது.

தீபாவளி பண்டிகை மாத இறுதியில் வந்தது விற்பனை குறைவுக்கு முதல் காரணம். 

மாத இறுதி என்பதால், பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லை. அதனால், பெரும்பாலானோர் மது வாங்குவதை தவிர்த்துள்ளனர். 

மேலும்,தமிழகத்தில் கடந்த அதிமுக,தற்போது திமுக ஆட்சியில் மொத்தம் 1,500 டாஸ்மாக் கடைகள்குறைக்கப்பட்டுள்ளன. இதுவும் இன்னொரு காரணம்.

அதேபோல், டாஸ்மாக் கடைகளுக்கு போட்டியாக தனியார் மனமகிழ் மன்றம் (கிளப்), ஹோட்டல் பார்கள் எண்ணிக்கை கூடியதும் மது விற்பனை சரிவுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

தீபாவளிக்கு அரசுக்கு வர வேண்டிய சுமார் ரூ.50 கோடிவருவாய், தனியாருக்கு சென்றுள்ளது. இந்த வருவாய் தீபாவளி மதுவிற்பனை கணக்கில் வரவில்லை. 

இதுவே, கடந்த ஆண்டை விட ரூ.29கோடி குறைந்ததற்கு காரணம். இவ்வாறு கூறினர்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்