ஆஸ்கார் வைல்டு இறந்த நாள்
ஆஸ்கார் வைல்டு இறந்த நாள்
(Oscar Wilde, 16 அக்டோபர் 1854 – 30 நவம்பர் 1900) ஒரு ஐரிய நாடகாசிரியரும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.
இவர் எண்ணற்ற சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ளார். நகைத்திறம் வாய்ந்த எழுத்துக்களுக்காக மிகவும் அறியப்பட்ட இவர், விக்டோரியாக் காலத்தில் இலண்டனில் மிகவும் வெற்றிகரமான நாடகாசிரியராக விளங்கியதுடன், அக்காலத்துப் பிரபலங்களுள் ஒருவராகவும் விளங்கினார்.
முதல் 1900 வரை வாழ்ந்த ஒரு ஐரிஷ் எழுத்தாளர் ஆஸ்கார் வைல்டு. எழுத்துப்பணியில் மட்டுமின்றி நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் புகழ் பெற்றவர்.
பல சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ள ஆஸ்கார் வைல்டு, தனது நகைச்சுவை வாய்ந்த படைப்புகளின் மூலம் பிரபலமானவர்.
இங்கிலாந்தின் மிகச்சிறந்த நாடக ஆசிரியராகவும், புகழ்பெற்ற மனிதர்களில் ஒருவராகவும் விளங்கினார்.
இவரால் உருவாக்கப்பட்ட சில நாடகங்கள் இன்றும் அரங்கேற்றம் கண்டு வருவது இவரது பெருமையை நமக்கு உணர்த்துகின்றது.
ஆஸ்கார் வைல்டு பொன் மொழி.
வாழ்க்கையில் இரண்டே துயரங்கள்தான்; ஒன்று, ஒருவருக்கு என்ன தேவைப்படுகிறதோ அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை மற்றொன்று ஒருவருக்கு எது தேவையில்லையோ அது அவர்களுக்குக் கிடைக்கின்றது.
வானிலை பற்றிய உரையாடல் என்பது கற்பனை செய்யமுடியாத நிலையின் கடைசிப் புகலிடம்.
எந்த மனிதனும் தனது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவிற்கு பணக்காரனாக இல்லை.
நாம் அனைவருமே பள்ளத்தில்தான் இருக்கிறோம், ஆனால் நம்மில் சிலரே நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள்.
வெற்றி என்பது ஒரு அறிவியல்; அதற்கான நிபந்தனைகள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
உங்கள் இதயத்தில் அன்பை வைத்துக்கொள்ளுங்கள்; அன்பு இல்லாத வாழ்க்கை, சூரிய ஒளியற்ற, இறந்த மலர்களைக் கொண்ட தோட்டத்தைப் போன்றது.
நமது செயல்களில் நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுத்துள்ள பெயரே அனுபவம் என்பதாகும்.
ஒரு மனிதன் தனது எதிரிகளைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க முடியாது.
பெண்களைப் படைத்ததன் நோக்கம், அவர்களின் மீது அன்பு செலுத்துவதற்காகவே தவிர அவர்களை புரிந்துகொள்வதற்காக அல்ல.
சிறிய அளவிலான நேர்மை ஒரு ஆபத்தான விசயம் பெரிய அளவிலான நேர்மை முற்றிலும் ஆபத்தான விசயம்.
ஒரு நம்பிக்கையாளர் குவளை பாதி நிரம்பியிருப்பதாக உங்களுக்குச் சொல்வார், ஒரு அவநம்பிக்கையாளர் பாதி வெறுமையாக இருப்பதாகச் சொல்வார் மேலும் ஒரு பொறியாளர் குவளை இருக்க வேண்டிய அளவை விட இரு மடங்கு பெரிதாக இருப்பதாகச் சொல்வார்.
மதம் என்பது ஒரு இருட்டு அறையில் ஒரு குருட்டு மனிதன் அங்கு இல்லாத ஒரு கருப்புப் பூனையைத் தேடிக் கண்டுபிடிப்பதை போன்றது.
எல்லோரும் நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் எல்லோரிடமும் எப்போதும் ஏதேனும் ஒரு நல்லது இருக்கிறது. யாரையும் விரைவில் மதிப்பிடாதீர்கள். ஏனெனில் எந்தவொரு துறவிக்கும் கடந்த காலம் உண்டு மற்றும் எந்தவொரு பாவிக்கும் எதிர்காலம் உண்டு.
வாழ்வது என்பது உலகின் மிக அரிதான விடயம். பெரும்பாலான மக்கள் உயிருடன் இருக்கிறார்கள், அவ்வளவுதான்.
அழகு உங்கள் கவனத்தை ஈர்க்கும். ஆளுமை உங்கள் இதயத்தை ஈர்க்கும்.
எப்பொழுதும் ஒரு அவநம்பிக்கையாளரிடமிருந்து பணம் கடன் வாங்குங்கள். அவர் அதை திரும்ப எதிர்பார்க்க மாட்டார்.
மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.
வாய்ப்பு கதவைத் தட்டும்போது அந்த சத்தம் குறித்து குறை கூறுபவரே ஒரு அவநம்பிக்கையாளர்.
உங்களால் நன்றாக எழுத முடியாவிட்டால், உங்களால் நன்றாகச் சிந்திக்க முடியாது, உங்களால் நன்றாகச் சிந்திக்க முடியாவிட்டால், மற்றவர்கள் உங்களுக்காகச் சிந்திப்பார்கள்.
எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் இல்லை என்பதை நினைவூட்டுவதற்காகவே பூனைகள் பூமியில் படைக்கப்பட்டுள்ளன.
உங்கள் பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை நிராகரித்தால் மனந்தளராதீர்கள். பல வருடங்கள் கழித்து அவர்கள் அதை தங்களின் சந்ததியினருக்கு வழங்குவார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக