தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் வேலைவாய்ப்பு.
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பட்டதாரி பயிற்சியாளர்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை – 500
சிவில் இன்ஜினியரிங் - 460
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 28
கட்டிடக்கலை - 12
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: 9,000
டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரண்டிஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை – 160
சிவில் இன்ஜினியரிங் - 150
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - 5
கட்டிடக்கலை - 5
கல்வி தகுதி: பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: 8,000
பொறியியல் அல்லாத பட்டதாரிகள்
காலியிடங்கள் எண்ணிக்கை - 100
கல்வி தகுதி: பி.ஏ. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: 9,000
வயது: 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
செய்யப்படும் முறை: இந்தப் பயிற்சிப் பணிகளுக்கு டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இணையதளப் பக்கத்தில் தேடுதல் தளத்தில் பொதுப்பணித் துறை தமிழ்நாடு என்பதைத் தேடி, கிளிக் செய்து அதன் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024

கருத்துகள்
கருத்துரையிடுக