கனமழை.. நெல்லை, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
அதிகாலை முதல் வெளுத்து வாங்கும் கனமழை..
நெல்லை, தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை Byதிருநெல்வேலி:
கனமழை காரணமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்.
இன்று அதிகாலை முதல் நெல்லை, தூத்துக்குடியில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. எனவே, தென் மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது.
மழை இதே போல தொடர்ந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் உருவாகும்.
பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக