15) அம்மா என்கிற அடையாளம்

அம்மா என்பவள் வெறும் அன்பை மட்டும்


கொடுப்பவள் அல்ல; குழந்தைகளுக்கு தன்னுடைய அனுபவத்தை எச்சரிக்கை உணர்வாக ஊட்டுபவளும் தான். அன்பின் குறியீடும் அம்மா,  
அம்மாவுக்குள் ஓர் ஆசிரியர் இருப்பதனாலும்  தாய் என்கிற  நிலைப்பாடு மிகச் சரியானது.  எல்லோரும் அவரவர் பங்குக்கு மனதில் ஒரு கசப்பு, காழ்ப்பு, வன்மம் என மோசமான நினைவுகள். வெளியே சொல்ல கூச்சப்படக்கூடிய எண்ணங்கள். இவை எல்லாவற்றின் கூட்டுத் தொகையாகத் தான் அனைவரும் இருக்கிறோம். 

கடுமையான பாதைக்குள் நீ போய்க் கொண்டிருக்கிறாய் என்று அந்தக் குழந்தைகளுக்கு தாய் சொல்லும்போது என்  கால கட்டங்களில் இல்லாத எல்லா சவால்களும் உன்னுடைய காலக் கட்டங்களில் இருக்கின்றன. அவற்றையும் தாண்டி  உன்னால் வரமுடியும்,   என்னை விட இயற்கை உன்னை இன்னும் புத்திசாலியாகத் தான் படைத்திருக்கிறது என்று சந்தோசம் இருக்கும். வாழ்க்கையை கடந்து வரும்போது,  அது தான் ஒரு பெரிய தாய்மைக்கு  அடையாளம்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்