உடன்கட்டை ஏறுதலைச் சட்டவிரோதமாக்கும் தடைச் சட்டம் கொண்டு வந்த நாள்
உடன்கட்டை ஏறுதலைச் சட்டவிரோதமாக்கும் 'வங்காள சதி(உடன்கட்டை ஏறுதல்) தடுப்பு விதி 1829' என்பதை, வங்காள தலைமை ஆளுனராக இருந்த வில்லியம் பெண்ட்டிங்க் பிரபு கொண்டு வந்த நாள்
இந்தச் சட்டத்துக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. லண்டனில் இயங்கிய உயர் ஆலோசனைக் குழுவான ப்ரிவி கவுன்சில், 1832இல் இந்தத் தடைச்சட்டத்தை உறுதிசெய்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இந்தத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும், இந்தியர்கள் ஆண்ட பகுதிகளில் தொடர்ந்தது. பெண்கள் சதியில் இருந்து தப்பி ஓடிய சம்பவமும், பிடிபட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதும் குறிப்புகளில் பதிவாகியுள்ளது.
பெண்களைத் தெய்வமாகக் கருதுவதாகக் கூறிக்கொள்ளும் இந்து மதம்தான் இத்தகைய கொடுமைகளைச் செய்தது. சதிச் சடங்கு, இந்துக்களின் நம்பிக்கை, அதற்குள் தலையிடுவது அவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக ஆகிவிடும் என்ற கருத்தை பாபர் கொண்டிருந்தார்.
அக்பர் ஆட்சிக் காலத்தில், சதி ஓரளவு தடை செய்யப்பட்டது. ஆனால், காவல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றால், சதிச் சடங்கை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று ஒரு விதிவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஒளரங்கசீப் காலத்தில், சதி முழுமையாகத் தடை செய்யப்பட்டது.
அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து பெண்ணை எரித்த சம்பவங்கள் தொடர்ந்தன. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகே, சதிச் சடங்கு குறித்து கடுமையான எதிர்வினைகள் உருவாகத் தொடங்கின. 1515-ல் போர்த்துக்கீசியர்கள் தங்களது ஆட்சியின்கீழ் இருந்த கோவாவில் சதியை முழுமையாகத் தடை செய்தனர்.
பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும் தங்கள் ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளில் இந்த முறையைத் தடை செய்தனர்.
சுதந்திரத்துக்குப் பின்னரும் 1987இல், ராஜஸ்தானின் தேவ்ராலா கிராமத்தில் ரூப் கன்வர் என்ற 18 வயதுப் பெண் சதியில் கொல்லப்பட்டது உலகம் எங்கும் எதிரொலித்த பின்னர், ராஜஸ்தான் அரசு, 1987இல் உடன்கட்டைத் தடைச் சட்டத்தை கொண்டுவந்தது.
1988இல் இச் சட்டம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக