500 ஆண்டுகளுக்கு முன்பே மழை நீர் சேகரிப்பு திட்டம் :

500 ஆண்டுகளுக்கு முன்பே, திட்டமிட்டு மழை நீர் சேகரிப்பு, குளங்களை தோற்றுவித்து அதிசயிக்க வைக்கிறார்கள் தென் தமிழகத்து செட்டி நாட்டு மக்கள்.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்த வரை காரைக்குடி, அதை சுற்றியுள்ள 96 ஊர்கள், ‘நாட்டுக் கோட்டை நகரத்தார் ஊர்கள்’ என அழைக்கப்படுகின்றன.

காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பள்ளத்தூர், கானாடுகாத்தான், ஆத்தங்குடி, கண்டனூர், கொத்தமங்கலம், சூரக்குடி, கல்லல், கோனபட்டு, போன்ற ஊர்களில் வாழ்ந்து வந்த நகரத்தார்கள், 500 ஆண்டுகளுக்கு முன்னரே மழை நீர் சேகரிக்கும் விஷயத்தில் முன்னுதாரணமாக இருந்திருக்கின்றனர்.

இங்கு கண்களை கவரும் பெரிய சைஸ் பங்களாக்கள் அதிகளவு உள்ளன. இவற்றை பார்ப்பதற் கென்றே சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி காரைக்குடிக்கு வருவார்கள். 

இந்த பங்களாக்களில், சேகரமாகும் பெருமளவு மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட் டத்தை உயர்த்துவதற்கான வழிகளை செட்டி நாட்டு மக்கள் செய்துள்ளனர்.

தமிழகத்தில் எங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டாலும், காரைக்குடி மட்டும் விதிவிலக்காக இருந்திருக்கிறது. வீடுகளில் முற்றம் மற்றும் ஆங்காங்கே மழை நீரை வடித்து எடுத்துச் செல்லும் வகையில் சாளரம் போன்று அமைத்துள்ளனர். 

பல்வேறு இடங்களில் இருந்து சேமிக்கப்ப டும் மழை நீர் ஒருங்கிணைக்கப்பட்டு வீட்டில் உள்ள கிணறுகளுக்கு சென்று சேரும்படி வடிமைத்துள்ளனர்.

மேலும், அனைத்து கோயில்களின் அருகே கட்டாயம் ஒரு குளத்தை அமைத்து மழை நீரை சேமித்துள்ளனர். மழை அதிகம் பெய்து குளங்கள் நிரம்பி வழிந்தாலும், உபரி நீர் ஊர் எல்லையில் உள்ள கண்மாய்களுக்கு சென்று சேரும் படி திட்டம் வகுத்துள்ளனர். 

குறிப்பாக, ஆத்தங்குடி, பள்ளத்தூர் உள்ளிட்ட ஊர்களில் சுமார் 200 வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குளங்கள், கண்மாய்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்