கேரி பெக்கர் (பிறப்பு திசம்பர் 2, 1930 - இறப்பு மே 3, 2014) ஒரு அமெரிக்க பொருளியலாளர்.

1992ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுப் பெற்ற கேரி பெக்கர் பிறந்த தினம். 


கேரி பெக்கர் (பிறப்பு திசம்பர் 2, 1930 - இறப்பு மே 3, 2014) ஒரு அமெரிக்க பொருளியலாளர். 

இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகவியல் பிரிவில் பேராசிரியராக இருந்தார். நியூயார்க டைம்ஸ் நாளிதழில் கடந்த 50 ஆண்டுகளின் மிகச் சிறந்த மற்றும் முக்கியமான ஒரு சமூக விஞ்ஞானி என்று பாராட்டப்பெற்றார். 

1992 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுப் பெற்றார் மற்றும் 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது பெற்றார். மேலும் 60 அகவை கடந்த பொருளியலாளர்களில் கணக்கெடுப்பில் மிகச்சிறந்த பொருளியலாளர் என்று முதல் இடத்தை பெக்கர் பெற்றார்.வரலாற்றில் இன்று டிசம்பர் 2


2)   1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்ட நாள்


புனித பவுல் பேராலயம் (St Paul's Cathedral) என்பது இலண்டனிலுள்ள அங்கிலிக்கப் பேராலயமும், இலண்டன் ஆயரின் அமைவிடமும், இலண்டன் மறைமாவட்டத்தின் தாய்க் கோவிலும் ஆகும். இது இலண்டன் நகரின் உயர் புள்ளியில், லுகேட் குன்றின் மேல் அமைந்து உள்ளது. இது பவுலுக்கு இத்தேவாலயம் அமைக்கப்பட்ட கி.பி. 604 இல் அர்ப்பணிக்கப்பட்டது. தற்போதுள்ள தேவாலயம் கிறிஸ்டோபர் ரென் என்பவரால் ஆங்கிலேய பரூக் பாணியில் வடிவமைக்கப்பட்டு 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. இலண்டன் பெரும் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட நகரை புணருத்தானம் செய்யும் பாரிய திட்டத்தில் இதுவும் கட்டப்பட்டது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்