நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்ட வார்த்தைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும் அவை குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் குழு, மா, வேலி, காணி உள்ளிட்ட பெயர்களில்தான் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வந்தன.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் கீழ் நிலங்களை அளக்கும் அலகுகள் சதுர அடி, சென்ட், ஏக்கர் என மாற்றம் கண்டன.
வீட்டுமனையோ அல்லது நிலமோ வாங்கும்போது எவ்வளவு ஏக்கர், சதுர அடி , எவ்வளவு கிரவுண்ட், செண்ட் என்று பேசுவார்கள்.
1 ஏக்கர் என்பது 100 செண்ட் ஆகும், இதுவே ஹெக்டேரில் 0.404694 என குறிப்பிடப்படும். 1 ஏக்கரை 43,560 சதுர அடி என்றும் குறிப்பிடலாம்.
செண்ட் கணக்கில் 1 செண்ட் என்பது 001 ஏக்கராகும், ஹெக்டேரில் 0040 என கூறலாம். 435.54 சதுர அடி 1 செண்ட் என கணக்கிடலாம்.
ஹெக்டேர் கணக்கில் 1 ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர் ஆகும், அதுவே 247 செண்ட் 1 ஹெக்டேர் ஆகும், 107637.8 சதுர அடி 1 ஹெக்டேர் என கணக்கிடப்படும்.
நிலம் சம்பந்தமாக வருவாய்த்துறை பராமரிக்கும் ஆவணங்களில் கிராம நத்தம் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
கிராம நத்தம் என்பது ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதி.
கோயில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தேவதானம் என்றும், கிராம பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் கிராம தானம் என்றும் குறிப்பிடப்படும்.
விஸ்தீரணம் என்பது நிலத்தின் பரப்பளவு மற்றும் எல்லைகளை குறிப்பது ஆகும். பட்டா என்பது ஒரு நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை குறிப்பதற்கான வருவாய்த்துறை ஆவணம்.
சிட்டா குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு ,அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் கொண்ட வருவாய் துறை ஆவணமாகும்.
வில்லங்க சான்று குறிப்பிட்ட ஒரு வீடு அல்லது மனையின் மீது ஒருவருக்கு இருக்கும் உரிமை மற்றும் அந்த சொத்து சம்பந்தமாக அவர் மேற்கொண்ட வெவ்வேறு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம் .
தாய் பத்திரம் ஒரு குறிப்பிட்ட நிலம் இப்போதைய உரிமையாளருக்கு முன்பு யாரிடம் இருந்தது என்பன உள்ளிட்ட நிலம் தொடர்பான பரிவர்த்தனை ஆவணங்கள் அடங்கிய பத்திரமாகும்.
நன்செய் நிலம் என்பது அதிக பாசன வசதி கொண்ட நிலம், புன்செய் நிலம் என்பது பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம் .

கருத்துகள்
கருத்துரையிடுக