விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் முரண்பாடுகள்; டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு ஒத்திவைப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு இன்று நடைபெறவிருந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அரும்பாக்கம் மற்றும் நந்தனத்தில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு ஒதுக்கீட்டில் முரண்பாடுகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அதாவது, பல விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் அந்தத் தேர்வு மையங்களில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அடுத்த தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கருத்துகள்
கருத்துரையிடுக