மசோதா மீது முடிவெடுக்க.. குடியரசு தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை: மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உத்தரவிட்டு உள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல்.S.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மசோதா மீது முடிவெடுக்க.. குடியரசு தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


கருத்துகள்
கருத்துரையிடுக