தவறான யுபிஐ அட்ரஸுக்கு பணம் அனுப்பினால் செய்ய வேண்டியது
தவறான யுபிஐ அட்ரஸுக்கு பணம் அனுப்பினால் செய்ய வேண்டியது…
பணம் செலுத்திய யுபிஐ பயனர், அதனை பெற்றவரை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லலாம். மேலும், பணத்தை திரும்பப் பெறுவதில் அவரது ஒத்துழைப்பை கோரலாம்.
சம்பந்தப்பட்ட யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்டை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லலாம். ரீஃபண்ட் சார்ந்து வேண்டிய தகவல்களை பயனர்கள் தர வேண்டியது இதில் அவசியமானதாக உள்ளது.
நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்ட் மூலம் தீர்வு எட்டாத பட்சத்தில் இந்த புகாரை வழங்கலாம்.
தவறான யுபிஐ பரிவர்த்தனை குறித்து பயனர் தனக்கு கணக்கு உள்ள வங்கியை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம்.
தவறான யுபிஐ பரிவர்த்தனை குறித்து 1800-120-1740 இந்த டோல் ப்ரீ எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
தவறான க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து, பணம் அனுப்பி இருந்தால் சம்பந்தப்பட்ட யுபிஐ செயலியின் கஸ்ட்மர் சப்போர்டை தொடர்பு கொண்டு விவரத்தை சொல்லலாம். அவர்கள் சொல்லும் வழிகாட்டுதலை பின்பற்றலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக