உலகின் முன்னணி தொழிலதிபர் எலோன் மஸ்க் குழந்தைகள் மற்றும் மனைவிக்காக பங்களாவுடன் கூடிய பண்ணையை 295 கோடிக்கு வாங்கினார்.
உலகின் முன்னணி தொழிலதிபர் எலோன் மஸ்க் தனது குழந்தைகள் மற்றும் மனைவிக்காக பங்களாவுடன் கூடிய பண்ணையை வாங்கியுள்ளார்.
எலோன் மஸ்க் உலகின் பணக்காரர்களில் ஒருவர் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
இவருக்கு 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள் உள்ளனர். 1வது ஜஸ்டின் வில்சனுக்கு 5 குழந்தைகளும், 2வது மனைவி க்ரீம்ஸுக்கு 3 குழந்தைகளும், 3வது மனைவி ஷிவோன் ஷில்லிஸுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.
முதல் 2 மனைவியரை பிரிந்து தற்போது 3வது மனைவி ஷிவோனுடன் குடும்பம் நடத்தி வருகிறார். ஷிவோன் ஷில்லிஸ் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தனது 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகளுடன் வாழ்வதற்காக டெக்சாஸில் 14,400 சதுர அடியில் பண்ணையை ரூ.295 கோடிக்கு வாங்கினார். 6 படுக்கையறைகள் கொண்ட பெரிய வீடும் இதில் அடங்கும்.
சொத்தை கையகப்படுத்துவதை ரகசியமாக வைத்திருக்கும் மஸ்க், விற்பனையாளர்களுடன் வெளிப்படுத்தாத ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார் என்று அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், தனக்கு சொத்துக்களை விற்றவர்களுக்கு 20 முதல் 70 சதவீதம் கூடுதல் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மஸ்க் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்த வீட்டை வாங்கியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள்
கருத்துரையிடுக