பல ஆயிரம் கோடிகளுக்கு சொத்து... தங்குவது இரட்டை படுக்கையறை வீட்டில்: Tata

 பல ஆயிரம் கோடிகளுக்கு சொத்து... தங்குவது இரட்டை படுக்கையறை வீட்டில்: டாடாவின் அறியப்படாத சகோதரர்

 ரத்தன் டாடாவின் சகோதரர் ஜிம்மி டாடா மிக எளிமையாக மும்பை மாநகரில் இரட்டை படுக்கையறை வீட்டில் வசித்து வருவது தற்போது திடீரென கவனத்தை ஈர்த்துள்ளது.

மிக எளிமையான வாழ்க்கை

பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் எப்போதும் இடம் பெறாதவர் ரத்தன் டாடா.  டாடா குழுமத்தில் இருந்து கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி நன்கொடையாக அளிக்கப்படுவதால், தனி நபர் சொத்து குறைவு.

ரத்தன் டாடா போலவே, அவரது சகோதரர் ஜிம்மி டாடாவும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  மும்பை மாநகரில் இரட்டை படுக்கையறை கொண்ட குடியிருப்பில் வசிக்கும் ஜிம்மி டாடா ஒரு மொபைல் போன் கூட சொந்தமாக வைத்திருப்பதில்லை.

ரத்தன் டாடா மற்றும் ஜிம்மி டாடா உட்பட அவர்களின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.23,874 கோடி என்று கூறப்படுகிறது.  டாடா குழுமத்தில் மட்டுமின்றி, டாடா குழுமத்தின் மற்ற நிறுவனங்களிலும் ஜிம்மி டாடாவுக்கு பங்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சொத்து மதிப்பு ரூ 3,800 கோடி

ஜிம்மி டாடா சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் அறங்காவலராக இருக்கிறார்.  இது அவரது தந்தை நேவல் டாடா 1989 இல் இறந்த பிறகு அவர் மரபுரிமையாகக் கிடைத்தது.  இந்த அறக்கட்டளையில் பல கோடி சொத்துகள் உள்ளன.

மேலும், ரத்தன் டாடாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.3,800 கோடி என்று கூறப்படுகிறது.  சமீபத்தில் ரத்தன் டாடா தனது சகோதரர் குறித்த ஒரு பழைய புகைப்படத்தை சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 அதன் பின்னரே, ஜிம்மி டாடா தொடர்பில் பலரும் தங்கள் நினைவுகளை பகிரத் தொடங்கினர்.  அதில் ஜிம்மி டாடா தொடர்பில் ஹர்ஷ் கோயங்கா தனது நினைவை பகிர்ந்துள்ளார்.  தொழில்துறையில் சிறந்து விளங்கியுள்ள ஜிம்மி டாடா திறமையான ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்