நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்
நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரும், நகைச்சுவை நடிகருமான பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
யு-டியூப் தளத்தில் பிராங்க் வீடியோ மூலம் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, சிவப்பு மஞ்சள் பச்சை, கோமாளி, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சில மாதங்களுக்கு முன் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நிதி சிக்கல் உடன் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார். பிஜிலி ரமேஷ் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் ஆவார். அவர் அளித்த பல பேட்டிகளில் தன்னை ரஜினியின் ரசிகராக காட்டிக் கொண்டவர். இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்

கருத்துகள்
கருத்துரையிடுக