தூத்துக்குடி தொழில் மாவட்டமாக உருவாகி வருகிறது. 10 சிபாட்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

 தூத்துக்குடி மாவட்டத்தில் 10 சிபாட்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு 7 சிபாட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.   




சட்டப் பேரவையில், சாத்தான்குளம் ஈகுவரமுக்கியில் சிப்காட் அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சிப்காட் அமைக்க 300 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், தொழில்நுட்ப சாத்தியக்கூறு இருந்தால் திட்ட அறிக்கை தயாரித்து, ஈகவரமுக்கியில் சிப்காட் அமைக்கப்படும் என்றார்.   


தூத்துக்குடியில் ஏற்கனவே 4 சிப்காட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 3 சிப்காட்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்