தூத்துக்குடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்

 சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது.


 இது தவிர, சர்வதேச அறைகலன் பூங்கா மற்றும் உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. 

இத்திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணை முட்டும் வளர்ச்சி: குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) இரண்டாவது ராக்கெட் ஏவுதளம், குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ளது. இது, சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான கேந்திரமாக செயல்படும். இந்த திட்டம், தூத்துக்குடியை உலக விண்வெளி வரைபடத்தில் ஒரு முக்கிய இடமாக நிலைநிறுத்தும். மேலும், இதனை சார்ந்து பல்வேறு துணைத் தொழில்கள் வளர்ச்சியடையும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்